Saturday, November 12, 2005

Image hosted by Photobucket.com
ரும் பாறைகளின் உச்சங்களை
தொட்டு அழுகின்ற
மோக அலைகளும் அலறுகிறது
கரைகளின் கன்னங்களை
முத்தமிட்டுத் திரும்பும்
ஏமாற்ற அலைகளும் புரிந்து கொள்கிறது
நாதம் அறுந்து
அபஸ்வரம் பேசுகின்ற
தென்றலும் பாடுகிறது
இதோ! என் கண்ணீரை வாங்கி
கறுத்து நிற்கும்
மேகங்களும்
மீண்டும் சொல்லிக் கொள்ளும்
அந்த மரணம் பற்றி.
அப்போ நீ புரிந்து கொள்வாய்
பிடுங்கி எறிந்து போன நரம்புகளை
~

நன்றி: கண்ணில் தெரியுது வானம (2001), வெளி.கொம்(2005)
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.